தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

திருப்பூர் : தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் : தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நொய்யல் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், திருப்பூர் மங்கலம் பகுதியில் இருந்து ராயபுரம் வழியாக செல்லக்கூடிய நொய்யல் ஆற்றில் நுரையுடன் கூடிய வெள்ளநீர் சென்றது. மழையின் காரணமாக உருவான வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி முறையாக இயங்கும் சாய சலவை பட்டறைகள் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து விட்டதால், நுரை ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகித்தனர். சில பகுதிகளில் மழை காரணமாக சாக்கடை நீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். 



அணைப்பாளையம் பகுதியில் மங்கலம் மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய தரைப்பாலம் நொய்யல் ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக மூழ்கியது இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சுமார் 6 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம் முதல் விடாது மழை பெய்து வருவதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...