நீலகிரி : குன்னூர் அருகே இத்தலார் பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிண்ணக்கொரைப் பகுதியில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக, ஆங்காங்கே ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், சாலைகளில் ஆங்காங்கே மரமும் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிண்ணக்கொரைப் பகுதியில் பெய்த கனமழைக் காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் செண்ணன் (70) என்ற முதியவர் வீட்டின் உள்ளேயே மாட்டிக் கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த மருத்துமனைக்கு தூக்கிச் சென்றனர், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, எமரால்டு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.