நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் செய்பவர்கள் வாகனங்களை கவனத்துடன் இயக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

நீலகிரி : தொடர் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி : தொடர் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 



நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 4 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. சாலையின் குறுக்கே மரங்கள் விழுவதால் போக்குவரத்தும் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 



கனமழை மற்றும் சூறைக்காற்று வீசி வருவதால் உதகை படகு இல்லத்தில் படகுகளின் சேவை திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பார்சன் வேலியில் உள்ள பம்ப் ஹவுசின் மின்மாற்றியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் உதகை நகருக்கு முறையான குடிநீர் வழங்கும் பணியும் தடைபட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...