கோவை : ஆனைமலை அருகே உள்ள சமத்தூர் பேரூராட்சியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சியின் செயல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சமத்தூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தெரிவிப்பது யாதெனில், ஆனைமலை வட்டம், சமத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது பருவமழை பெய்து கொண்டிருப்பதால், டெங்கு நோய் பரவாமல் இருக்க குடிநீர் பாத்திரங்களை மூடி வைப்பதுடன், மேல்நிலைத் தொட்டிகளில் மூடி போட்டு டெங்கு கொசு புழுக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும். அதோடு, குடிநீரை காய்ச்சி குடித்து நோய் பரவாமல் தடுக்கவும், தங்கள் வீடுகளின் முன் உள்ள சாக்கடையில் காய்கறிக் குப்பைகளை போட்டு அடைக்காமலும், அருகில் உள்ள நபர்களின் விரோத போக்கின் காரணமாக வேண்டுமென்றே சாக்கடையை அடைத்து வைக்கக் கூடாது என சமத்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் கே. ராஜா பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.