சமத்தூர் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கோவை : ஆனைமலை அருகே உள்ள சமத்தூர் பேரூராட்சியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சியின் செயல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை : ஆனைமலை அருகே உள்ள சமத்தூர் பேரூராட்சியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சியின் செயல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். 



சென்னை பேரூராட்சிகளின்‌ இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சமத்தூர்‌ பேரூராட்சி பகுதிகளில்‌ உள்ள பொதுமக்களுக்கு தெரிவிப்பது யாதெனில்,‌ ஆனைமலை வட்டம்‌, சமத்தூர்‌ பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ தற்போது பருவமழை பெய்து கொண்டிருப்பதால்,‌ டெங்கு நோய்‌ பரவாமல்‌ இருக்க குடிநீர்‌ பாத்திரங்களை மூடி வைப்பதுடன்,‌ மேல்நிலைத்‌ தொட்டிகளில்‌ மூடி போட்டு டெங்கு கொசு புழுக்கள்‌ உருவாவதைத் தடுக்க வேண்டும். அதோடு,‌ குடிநீரை காய்ச்சி குடித்து நோய்‌ பரவாமல்‌ தடுக்கவும்‌, தங்கள்‌ வீடுகளின்‌ முன்‌ உள்ள சாக்கடையில்‌ காய்கறிக் குப்பைகளை போட்டு அடைக்காமலும்‌, அருகில்‌ உள்ள நபர்களின்‌ விரோத போக்கின்‌ காரணமாக வேண்டுமென்றே சாக்கடையை அடைத்து வைக்கக் கூடாது என சமத்தூர்‌ பேரூராட்சியின்‌ செயல்‌ அலுவலர்‌ கே. ராஜா பொதுமக்களைக் கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...