வெள்ள அபாய எச்சரிக்கை : பவானி ஆற்று கரையோர மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு

கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 36,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுவதால், இன்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 36,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுவதால், இன்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், ஓராண்டிற்குப் பிறகு அணையில் இருந்து மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. கேரளாவின் அட்டப்பாடி, சிறுவானி பகுதிகளிலும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாகவும், பில்லூர் அணை நிரம்பி உபரி நீரானது வெளியேற்றப்படுகிறது. நேற்று இரவும் மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நீடிக்கும் கன மழையால், பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் நான்கு மதகுகள் வழியே 36,000 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி ஆற்றில் பெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

எனவே, பவானி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை 4-வது நாளாக இன்றும் விடுக்கப்பட்டுள்ளது. ஆலாங்கொம்பு, லிங்காபுரம், வச்சினம்பாளையம், நில்லித்துரை உள்ளிட்ட கரையோர மக்கள் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...