கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில் இரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் இரத்தத்தை பதப்படுத்துவதற்கு குளிர்சாதனப் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது .இந்த குளிர்சாதனப் பெட்டியில் நேற்று இரவு மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின்போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள கேஸ் வெளியேறியதால் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்னரை மணிநேரத்திற்க்கும் மேலாக போராடினர்.

இந்த திடீர் தீ விபத்தால் இரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 65 யூனிட்டுக்கு மேலான இரத்தம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
