பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.



மேலும் இந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில் இரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் இரத்தத்தை பதப்படுத்துவதற்கு குளிர்சாதனப் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது .இந்த குளிர்சாதனப் பெட்டியில் நேற்று இரவு மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்தின்போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள கேஸ் வெளியேறியதால் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்னரை மணிநேரத்திற்க்கும் மேலாக போராடினர். 



இந்த திடீர் தீ விபத்தால் இரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 65 யூனிட்டுக்கு மேலான இரத்தம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...