கோவை : கோவையில் இருந்து ஆசியாவையும் கடந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரை செல்லும் விழிப்புணர்வு கார் பயணம் தொடங்கியது.
கோவை : கோவையில் இருந்து ஆசியாவையும் கடந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரை செல்லும் விழிப்புணர்வு கார் பயணம் தொடங்கியது.
கருப்பைவாய் புற்றுநோய் குறித்தும், எச்.பி.வி. தடுப்பூசி குறித்தும், பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்.ஆர். டிரஸ்ட் எனும் தன்னார்வல அமைப்பு பெண்மை காக்க பெரும் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் வழக்கறிஞர் சரத் மாதவ், தொழில்முனைவர் பிரதீப் யுவராஜ், சமூக சேவகர் ஜோமட் மணி, சாகசப்பயணி அஞ்சனா கவுல், சஞ்சய் சுப்பைய்யன், இல்லத்தரசி ஷீலா வர்கீஸ், நுண்கலைஞர் மாதுரி சார்பு மற்றும் மீனாட்சி அரவிந்த் ஆகிய 8 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரை இரண்டு கார்களில் சாலை வழியாகவே நீண்ட விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ டாடா மோட்டார்ஸ் வளாகத்தில் இந்த நீண்ட விழிப்புணர்வு பயணத்தை பத்மஸ்ரீ விருது பெற்ற தொழில்முனைவர் அருணாச்சலம் முருகானந்தம், ஓய்வு பெற்ற கடற்படை உயரதிகாரி ராஜீவ் சவுத்ரி, தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து மற்றும் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து பயணத்தைத் துவங்கி வைத்தனர்.