கோவையில் ரஷ்யாவின்‌ செயிண்ட்‌ பீட்டர்ஸ்பெர்க்‌ வரை பெண்மை காக்க பெரும் பயணம்‌ தொடக்கம்

கோவை : கோவையில் இருந்து ஆசியாவையும் கடந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரை செல்லும் விழிப்புணர்வு கார் பயணம் தொடங்கியது.


கோவை : கோவையில் இருந்து ஆசியாவையும் கடந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரை செல்லும் விழிப்புணர்வு கார் பயணம் தொடங்கியது.

கருப்பைவாய்‌ புற்றுநோய்‌ குறித்தும்‌, எச்.பி.வி. தடுப்பூசி குறித்தும்,‌ பெண்கள்‌ மத்தியில்‌ விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்‌.ஆர்‌. டிரஸ்ட்‌ எனும்‌ தன்னார்வல அமைப்பு பெண்மை காக்க பெரும் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில்‌ வழக்கறிஞர்‌ சரத்‌ மாதவ்‌, தொழில்முனைவர்‌ பிரதீப்‌ யுவராஜ்‌, சமூக சேவகர்‌ ஜோமட்‌ மணி, சாகசப்பயணி அஞ்சனா கவுல்‌, சஞ்சய்‌ சுப்பைய்யன்‌, இல்லத்தரசி ஷீலா வர்கீஸ்‌, நுண்கலைஞர்‌ மாதுரி சார்பு மற்றும்‌ மீனாட்சி அரவிந்த் ஆகிய 8 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து ரஷ்யாவின்‌ செயிண்ட்‌ பீட்டர்ஸ்பெர்க்‌ வரை இரண்டு கார்களில்‌ சாலை வழியாகவே நீண்ட விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். அவிநாசி சாலையில்‌ உள்ள ஸ்ரீ டாடா மோட்டார்ஸ் வளாகத்தில்‌ இந்த நீண்ட விழிப்புணர்வு பயணத்தை பத்மஸ்ரீ விருது பெற்ற தொழில்முனைவர்‌ அருணாச்சலம்‌ முருகானந்தம்‌, ஓய்வு பெற்ற கடற்படை உயரதிகாரி ராஜீவ்‌ சவுத்ரி, தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து மற்றும்‌ பா.ஜ.க. மாநில பொதுச்‌ செயலாளர்‌ வானதி ஸ்ரீனிவாசன்‌ ஆகியோர்‌ கொடியசைத்து பயணத்தைத் துவங்கி வைத்தனர்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...