கோவை : உதகை மலை ரயில் தனியார்மயமாக்கப்படுவதை தொடக்க நிலையிலையே தடுத்து நிறுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது சரியான செயல் அல்ல. கறைபடிந்த செயலாக இது வரலாற்றில் பார்க்கப்படும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இருகட்சிகளுமே காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. காஷ்மீர் இணைப்பின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் குப்பையில் போடப்பட்டு உள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என அமல்படுத்த முயன்றாலும், எந்த காலத்திலும் அதை நடைமுறைப்படுத்த முடியாது.

உதகை ரயில் தனியாரிடம் ஒப்படைப்பதால் சாதாரண மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். உதகை ரயில் தனியார்மயமாக்கப்படுவது துவக்க வேலையிலே நிறுத்த வேண்டும். சூயஸ் திட்டம் தண்ணீருக்கு கை ஏந்தும் நிலையை ஏற்படுத்தவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட நிறுவனம் சூயஸ். ஆறு குளங்கள் அடமானம் வைப்பதை ஏற்க மாட்டோம். ஜி.எஸ்.டி.யால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டது. இரட்டை வரியை மத்திய, மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும், என அவர் தெரிவித்தார்.