கோவை : சூலூர் அருகே வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சூலூர் அருகே உள்ள சேரன் நகரில் வசித்து வரும் அப்துல் ரஹீம் என்பவருக்கு வீடு கட்டுவதற்காக கிருஷ்ணன் என்பவர் வங்கியில் கடன் பெற்று தந்துள்ளார். அப்துலுக்கு மேலும் ரூ. 30 லட்சம் தேவைப்படுவதால் அவர் மீண்டும் கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் செல்வக்குமார் ஆகியோரை அணுகியுள்ளார். அப்போது, கடன் பெறுவதற்காக, அப்துல் ரஹீமிடம் இருந்து ஆவணங்களையும், கையெழுத்தையும் வாங்கியதுடன், நிரப்பப்படாத காசோலையையும் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, நிரப்பப்படாத காசோலையைப் பயன்படுத்தி அப்துல் ரஹீமின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 42,45,000-த்தை நெப்ட் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதே போல 8 நபர்களிடம் வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ. 2 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக அப்துல் ரஹீம் கோவை மாநகரா குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணின் உத்தரவுப்படி, கடந்த 3-ம் தேதி கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், எஸ். சாந்தி (48), எஸ். கவுதமன் (25) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.