கோவையில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக ரூ. 2 கோடி வரை மோசடி : பெண் உள்பட இருவர் கைது

கோவை : சூலூர் அருகே வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை : சூலூர் அருகே வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சூலூர் அருகே உள்ள சேரன்‌ நகரில்‌ வசித்து வரும் அப்துல் ‌ரஹீம்‌ என்பவருக்கு வீடு கட்டுவதற்காக கிருஷ்ணன் என்பவர் வங்கியில் கடன் பெற்று தந்துள்ளார். அப்துலுக்கு மேலும் ரூ. 30 லட்சம் தேவைப்படுவதால் அவர் மீண்டும் கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் செல்வக்குமார் ஆகியோரை அணுகியுள்ளார். அப்போது, கடன் பெறுவதற்காக, அப்துல் ரஹீமிடம் இருந்து ஆவணங்களையும், கையெழுத்தையும் வாங்கியதுடன், நிரப்பப்படாத காசோலையையும் பெற்றுக் கொண்டனர். 

இதையடுத்து, நிரப்பப்படாத காசோலையைப் பயன்படுத்தி அப்துல் ரஹீமின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 42,45,000-த்தை நெப்ட் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதே போல 8 நபர்களிடம் வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ. 2 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக அப்துல் ரஹீம் கோவை மாநகரா குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணின் உத்தரவுப்படி, கடந்த 3-ம் தேதி கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், எஸ். சாந்தி (48), எஸ். கவுதமன் (25) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...