கோவை : கோவையின் முக்கிய பகுதிகளில் நிறுத்தப்படும் ஆட்டோக்களில் போக்குவரத்து அலுவலர் தலைமையில் நடத்திய சோதனையில், விதிகளை மீறிய ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பது, சிறைபிடிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் ஆகியோரின் உத்தரவின் பேரில் பல்வேறு தரப்பினர்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே. பாஸ்கரின் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், கோவை (மேற்கு), கோவை (வடக்கு), கோவை (தெற்கு) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், காவல்துறையினருடன் சேர்ந்து நேற்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை ஒப்பணக்காரத் தெரு, காந்திபுரம், கோவை ரயில் நிலையம் முன்புறம் மற்றும் பின்புறம் நிறுத்தப்படும் ஆட்டோக்களில் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.
மொத்தம் சுமார் 231 ஆட்டோக்களில் சோதனை செய்யப்பட்டன. அதில், 47 ஆட்டோக்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டன. 37 ஆட்டோக்கள் தகுதிச்சான்று புதுப்பிக்காதது, அனுமதிச்சீட்டு காலாவதியானது, ஒட்டுநர் உரிமம் இல்லாதது மற்றும் அளவுக்கதிகமான நபர்களை ஏற்றிய குற்றத்திற்காக சிறைபிடிக்கப்பட்டன. மேலும், 10 வாகனங்களுக்கு அபராதம் ரூ. 4,500 வசூலிக்கப்பட்டது. இச்சோதனை தொடர்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.