கோவையில் ஆட்டோக்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை : விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

கோவை : கோவையின் முக்கிய பகுதிகளில் நிறுத்தப்படும் ஆட்டோக்களில் போக்குவரத்து அலுவலர் தலைமையில் நடத்திய சோதனையில், விதிகளை மீறிய ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பது, சிறைபிடிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவை : கோவையின் முக்கிய பகுதிகளில் நிறுத்தப்படும் ஆட்டோக்களில் போக்குவரத்து அலுவலர் தலைமையில் நடத்திய சோதனையில், விதிகளை மீறிய ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பது, சிறைபிடிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கோவை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ கோவை சரக இணைப்‌ போக்குவரத்து ஆணையர் ஆகியோரின்‌ உத்தரவின்‌ பேரில்‌ பல்வேறு தரப்பினர்களிடமிருந்து வந்த புகாரின்‌ அடிப்படையில்,‌ கோவை வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌ ஜே.கே. பாஸ்கரின் தலைமையில்‌ வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்கள்,‌ கோவை (மேற்கு), கோவை (வடக்கு), கோவை (தெற்கு) மற்றும்‌ மோட்டார்‌ வாகன ஆய்வாளர்கள்‌, காவல்துறையினருடன்‌ சேர்ந்து நேற்று மாலை 3 மணி முதல்‌ இரவு 8 மணி வரை ஒப்பணக்காரத்‌ தெரு, காந்திபுரம்‌, கோவை ரயில்‌ நிலையம்‌ முன்புறம்‌ மற்றும்‌ பின்புறம்‌ நிறுத்தப்படும் ஆட்டோக்களில் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர். 

மொத்தம் சுமார்‌ 231 ஆட்டோக்களில்‌ சோதனை செய்யப்பட்டன. அதில், 47 ஆட்டோக்களுக்கு சோதனை அறிக்கைகள்‌ வழங்கப்பட்டன. 37 ஆட்டோக்கள் தகுதிச்சான்று புதுப்பிக்காதது, அனுமதிச்சீட்டு காலாவதியானது, ஒட்டுநர்‌ உரிமம்‌ இல்லாதது மற்றும்‌ அளவுக்கதிகமான நபர்களை ஏற்றிய குற்றத்திற்காக சிறைபிடிக்கப்பட்டன. மேலும்,‌ 10 வாகனங்களுக்கு அபராதம்‌ ரூ. 4,500 வசூலிக்கப்பட்டது. இச்சோதனை தொடர்ந்து நடைபெறும்‌ என வட்டாரப்‌ போக்குவரத்து அதிகாரிகள்‌ தெரிவித்‌தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...