நீலகிரி : 2-வது சீசனுக்கு தயார்படுத்தும் வகையில் குன்னூர் காட்டேரி பூங்காவில் ஒரு லட்சம் மலர் நாற்றுகள் நடவுப்பணி தொடங்கியது.

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்காவில், பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 30 வகையான மலர் நாற்றுகள், கடந்த சீசனில் பூக்கள் பூத்து காய்ந்து போன மலர் செடிகளில் இருந்து விதைகளை சேகரித்து, ஒரு லட்சம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து தோட்டக்கலை துறையினர் கூறுகையில், "இந்த செடிகள் அனைத்தும் செட்பம்பர் மாதம் கடைசி வாரத்தில் பூக்கள் பூக்க துவங்கும். கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் சுமார் 58,926 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதன்மூலம், ஏறக்குறைய ரூ. 10,94,500 வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருட 2-வது சீசனுக்கு சென்ற ஆண்டை விட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றனர்.