உதகை - மைசூர் சாலையில் மண்சரிவு : வாகனங்களை கவனமுடன் இயக்க காவல்துறை வேண்டுகோள்

நீலகிரி : தொடர் மழையின் காரணமாக உதகையில் - மைசூர் சாலையில் உள்ள பைக்காரா பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனங்களை கவனமுடன் இயக்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி : தொடர் மழையின் காரணமாக உதகையில் - மைசூர் சாலையில் உள்ள பைக்காரா பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனங்களை கவனமுடன் இயக்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 



நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இதன் காரணமாக, பைக்காரா பகுதியில் உள்ள தடுப்பு சுவர் இடிந்து சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. எனவே, ஒவ்வொரு வாகனங்களாக நிறுத்தி அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், விபத்துக்கள் நேரும் அபாயம் உள்ளதால், வாகனங்களை மிகவும் கவனமுடன் இயக்க காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...