திருப்பூர் : தேச மற்றும் ஜனநாயக விரோத அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவது முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நிரூபணம் ஆகி விட்டதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மத்திய அரசின் முதல் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சில மசோதாக்களை நிறைவேற்றியிருப்பதன் மூலம் தேச விரோத, ஜனநாயக விரோத அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவதை முதல் கூட்டத்தொடரிலேயே நிரூபணம் செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே ரேசன் என்னும் மத்திய அரசு, ஒரே சாதி என்பதை வலியுறுத்தாதது ஏன்..?, இதன்மூலம் மேல் ஆதிக்க சாதியினருக்கான சர்க்கார் என்பதையும் நிரூபணம் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசோ, தமிழக நலனில் அக்கறை இல்லாமல் மோடியின் கொத்தடிமைகளாக மாறிவிட்டார்களோ என்ற சந்தேகம் நிலவக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவை ஆட்சி செய்வது கூட்டு அமைச்சரவை அல்ல, மோடி, அமித்ஷா மட்டும்தான். அவர்கள் சொல்லுவதைக் கேள்வியே இல்லாமல் நிறைவேற்றும் பணீயினைத்தான் மத்திய அமைச்சரவை செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரலைக் கேட்க மத்திய அரசு இல்லை. அதனால், மக்கள் மத்தியில் தெரியப்படுத்தி ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்தை இடதுசாரிகள் முன்னெடுப்போம், என தெரிவித்தார்.