மதுபோதையில் விட்டுச் சென்ற செல்போன் மற்றும் ரொக்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த கோவை மாநகர போலீசார்

கோவை : டவுன்ஹால் அருகே மதுபோதையில் ஒருவர் தனது பணம் மற்றும் செல்போனை விட்டுச் சென்றதை மீட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அதனை உரிய நபரிடம் போலீசார் இன்று ஒப்படைத்தனர்.


கோவை : டவுன்ஹால் அருகே மதுபோதையில் ஒருவர் தனது பணம் மற்றும் செல்போனை விட்டுச் சென்றதை மீட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அதனை உரிய நபரிடம் போலீசார் இன்று ஒப்படைத்தனர்.

கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே கடந்த மாதம் மதுபோதையில் ஒருவர் பணம் மற்றும் செல்போனுடன் மயங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து, மயங்கிய நிலையில் உள்ள நபரை சுற்றி சந்தேகத்துக்கிடமான சிலர் வந்து சென்றனர். இதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சர்புதீன் (50) மற்றும் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சாஜகான், ஜோசப், காஜா உசேன் ஆகியோர் பணம் மற்றும் செல்போனை மீட்டு மாநகர காவல் துணை ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், போலீசார் பணத்துக்கு உரியவரான கோவைபுதூர் சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (40) என்பவரைக் கண்டுபிடித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வரவழைத்தனர். பின்னர், அவரிடம் 4 ஆயிரத்து 417 ரூபாய் பணத்தையும், அவரது செல்போனையும் ஒப்படைத்தனர். அப்போது, பொருட்களைப் பெற்றுக் கொண்ட வரதராஜன், போலீசார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...