கோவை : டவுன்ஹால் அருகே மதுபோதையில் ஒருவர் தனது பணம் மற்றும் செல்போனை விட்டுச் சென்றதை மீட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அதனை உரிய நபரிடம் போலீசார் இன்று ஒப்படைத்தனர்.
கோவை : டவுன்ஹால் அருகே மதுபோதையில் ஒருவர் தனது பணம் மற்றும் செல்போனை விட்டுச் சென்றதை மீட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அதனை உரிய நபரிடம் போலீசார் இன்று ஒப்படைத்தனர்.
கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே கடந்த மாதம் மதுபோதையில் ஒருவர் பணம் மற்றும் செல்போனுடன் மயங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து, மயங்கிய நிலையில் உள்ள நபரை சுற்றி சந்தேகத்துக்கிடமான சிலர் வந்து சென்றனர். இதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சர்புதீன் (50) மற்றும் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சாஜகான், ஜோசப், காஜா உசேன் ஆகியோர் பணம் மற்றும் செல்போனை மீட்டு மாநகர காவல் துணை ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், போலீசார் பணத்துக்கு உரியவரான கோவைபுதூர் சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (40) என்பவரைக் கண்டுபிடித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வரவழைத்தனர். பின்னர், அவரிடம் 4 ஆயிரத்து 417 ரூபாய் பணத்தையும், அவரது செல்போனையும் ஒப்படைத்தனர். அப்போது, பொருட்களைப் பெற்றுக் கொண்ட வரதராஜன், போலீசார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.