கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்றும் மூடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. நேற்றும் விடாது மழை பெய்ததால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தில் 496 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.