கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுவதால் மூன்றாவது நாளாக தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணை நேற்று முன்தினம் தனது முழு கொள்ளளவை எட்டியதால், ஓராண்டிற்குப் பிறகு அணையில் இருந்து மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. கேரளாவின் அட்டப்பாடி, சிறுவானி பகுதிகளிலும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாகவும், பில்லூர் அணை நிரம்பி உபரி நீரானது வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே, நேற்று மழையின் அளவு குறைந்ததால், காலை தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்து வருவதால், பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக உயந்தது. இதனால், இன்று அதிகாலை முதல் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியே 20,000 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், பவானி ஆற்று மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எனவே, கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மூன்றாவது நாளாக இன்றும் விடுக்கப்பட்டுள்ளது. ஆலாங்கொம்பு, லிங்காபுரம், வச்சினம்பாளையம், நில்லித்துரை உள்ளிட்ட கரையோர மக்கள் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

தற்போது, 100 அடி கொள்ளளவு அணையின் நீர் மட்டம் 97அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.