கருப்பைவாய்‌ புற்றுநோய்‌ குறித்து 21,000 கி.மீ. தூர சாலை விழிப்புணர்வு பயணம் கோவையில் நாளை தொடக்கம்

கோவை : கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் இருந்து சுமார் 21,000 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரையிலான சாலை விழிப்புணர்வு பயணம் நாளை தொடங்குகிறது.

கோவை : கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் இருந்து சுமார் 21,000 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரையிலான சாலை விழிப்புணர்வு பயணம் நாளை தொடங்குகிறது. 

பெண்களை அதிகம்‌ தாக்கும்‌ புற்றுநோய்களுள்‌ ஒன்று கருப்பை வாய்‌ புற்றுநோய்‌. கருப்பையின்‌ வாய்ப் பகுதியில்‌ ஹ்யூமன்‌ பாப்பிலோமா எனும்‌ வைரஸ்‌ தாக்குதலினால்‌ இந்நோய்‌ உண்டாகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் கருப்பைவாய் புற்றுநோயினால் உயிரிழக்கிறார். 

இந்த நிலையில், இந்த கருப்பைவாய் புற்றுநோய் குறித்தும், எச்.பி.வி. தடுப்பூசி பற்றியும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர். ஆர். டிரஸ்ட் எனும் தன்னார்வல அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக, 8 தன்னார்வலர்கள் கோவையில் இருந்து சுமார் 21,000 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வரை 2 கார்களில் சாலை வழியாகவே நீண்ட விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள். 



வழக்கறிஞர் சரத் மாதவ், தொழில்முனைவர் பிரதீப் யுவராஜ், சமூக சேவகர் ஜோமட் மணி, சாகசப்பயணி அஞ்சனா கவுல், சஞ்சய் சுப்பையன், இல்லத்தரசி ஷீலா வர்கீஸ், நுண் கலைஞர் மாதுரி சார்பு மற்றும் மீனாட்சி அரவிந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் நாளை (ஆக.,7) முதல் கோவையில் இருந்து தங்களது பயணத்தை தொடங்குகின்றனர். இந்தக் குழு இந்தியா, நேபாள், சீனா, திபெத், ரஷ்யா ஆகிய நாடுகளின் பெருநகரங்களிலும், சிறிய கிராமங்களிலும் விழிப்புணர்வு உரை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது. நாளை துவங்கும் இந்தப் பயணம் அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவடைய இருக்கிறது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...