நீலகிரி : ஈரோட்டில் இருத்து உதகைக்கு கேஸ் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து உதகைக்கு கேஸ் சிலிண்டர்களை ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பாலசுப்ரமணி (60) என்பவர் ஓட்டி வந்தார். இவர் ஓட்டி வந்த லாரி காட்டேரி அருகே சென்ற போது, ஓட்டுநர் பாலசுப்ரமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அங்கேயே உயிரிழந்தார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், குணவதி என்ற 6-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளது. இவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஓட்டுநர் பாலசுப்ரமணியம் உயிரிழந்த சம்பவம் குறித்து குன்னூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.