கோவையில் திருமணமான தொழிலதிபர்களை குறிவைத்து பணம் பறிக்கும் பெண் காவலர் உள்பட இரு பெண்கள் மீது நடவடிக்கை கோரி மனு

கோவை : திருமணமான தொழிலதிபர்களை குறிவைத்து பணம் பறிக்கும் மைதிலி மற்றும் காவலர் கவிதா மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட சதீஷ் குமார் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை : திருமணமான தொழிலதிபர்களை குறிவைத்து பணம் பறிக்கும் மைதிலி மற்றும் காவலர் கவிதா மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட சதீஷ் குமார் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் இவரது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், சதீஷ் குமார் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் கவிதா என்பவருடன் பழகி வந்தார். சதீஷ்குமார் அவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் அந்தப் பெண் போலீசாருடன் தனிமையில் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் கவிதாவை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.



இந்த நிலையில், டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளரை இன்று நேரில் சந்தித்து புகார் அளித்தார். 

முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது :- எனது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மைதிலி என்பவர் மூலம் கவிதா என்ற பெண் காவலர் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் அந்த பெண் காவலருடன் பல இடங்களில் தனிமையில் இருந்து வந்துள்ளேன். இப்படியிருக்க எனது அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் திட்டமிடப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வெளிவர காரணமாக இருந்த மைதிலி திட்டமிட்டு என்னிடம் பணம் பறித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நான் விசாரித்த போது, இந்தப் பணத்தில் கவிதாவிற்கும் பங்கு போகிறது என்பதை அறிந்துள்ளேன்.



மேலும், மைதிலியும், காவலர் கவிதாவும் சேர்ந்து திருமணமான வசதி படைத்தவர்களை திட்டமிட்டு பழகி வீடியோக்கள் எடுத்து மிரட்டி வருகிறார்கள். ஆகவே, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...