தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் பனப்பள்ளி மலை கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

கோவை : பல ஆண்டுகளாக சீரான மின்சார சேவையின்றி அவதிப்பட்டு வந்த பனப்பள்ளி மலை கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுக்கப்பட்டது.


கோவை : பல ஆண்டுகளாக சீரான மின்சார சேவையின்றி அவதிப்பட்டு வந்த பனப்பள்ளி மலை கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுக்கப்பட்டது.

பனப்பள்ளி மலை கிராமத்துக்கு என்று தனியாக மின்மாற்றி இல்லாத காரணத்தால் கொண்டனூர் புதூர் மலை கிராமத்தில் இருந்து பல ஆண்டுகளாக மின்சாரம் கொடுக்கப்பட்டது. கொண்டனூர் புதூரில் இருந்து பனப்பள்ளி மலை கிராமம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரணத்தால் சிங்கிள் பேஸ் மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதுவும் சீரான மின் இணைப்பு எப்போதுமே இருக்காது. இதனால், அக்கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், பழங்குடியினர் மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய மின்மாற்றி அமைக்க வொர்க் ஆர்டர் கொடுத்து மின் சாதனங்கள் மற்றும் மின் கம்பங்களை கொண்டு வந்து கிடப்பில் போடப்பட்டன. 

கடந்த மாதம் இரண்டாம் வாரத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி பதிவு செய்யப்பட்ட காரணத்தால், கடந்த மாதம் 20-ம் தேதி மின்மாற்றி அமைப்பதற்கான பணிகளை மின்வாரியத் துறையினர் தொடங்கினர். மின்மாற்றி அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், நேற்று மாலை 5.45 மணிக்கு புதிய மின்மாற்றி பனப்பள்ளி மலை கிராமத்துக்கு வழங்கப்பட்டது. புதிய மின்மாற்றி துவக்க விழாவில் மின்வாரியம் அதிகாரிகள் பாலசுப்ரமணியன் (EE), தெய்வ சிகாமணி (AD), தேவராஜன், பழனிசாமி (EX Ward Member) மற்றும் பனப்பள்ளி மலை கிராமம் மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...