நீலகிரி : தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் தொடர்ந்து, மழை பெய்து வருகிறது. எனவே. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைப் பொழிவு அதிகம் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.