கோவையில் நண்பர்கள் தினத்தை ஆதரவற்ற முதியோர்களுடன் கொண்டாடிய ரோட்டரி சங்க ஐகான் உறுப்பினர்கள்

கோவை : நண்பர்கள் தினத்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள முதியோர்கள் தங்கும் விடுதியில் உள்ள முதிவர்களுடன் ரோட்டரி சங்க ஐகான் உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை : நண்பர்கள் தினத்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள முதியோர்கள் தங்கும் விடுதியில் உள்ள முதிவர்களுடன் ரோட்டரி சங்க ஐகான் உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரோட்டரி சங்க கிளை அமைப்பான ரோட்டரி ஐகான் கோவை அமைப்பினர் நண்பர்கள் தினதன்று மாநகராட்சி கட்டுபாட்டில் ஆர்.எஸ் புரம் பகுதியில் செயல்பட்டு வரும் முதியோர்கள் தங்கும் இரவு விடுதியில் கொண்டாடினர். அப்போது, அங்குள்ள முதியோர்களுடன் பல்வேறு விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர். இவர்களுடன் ஆடல், பாடல், நடன நிகழ்ச்சி என அங்கிருந்த முதியவர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது 

இது குறித்து ரோட்டரி கிளப் அமைப்பினர் கூறுகையில், “பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் ரோட்டரி ஐகான் உறுப்பினர்கள் இந்த வருடம் நண்பர்கள் தினத்தை முதியோர்களுடன் கொண்டாடுவது என முடிவு செய்யபட்டது. அதன்படி, 30-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி முதியோர் இரவு தங்கும் விடுதியில் நண்பர்கள் தினத்தன்று கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட சந்தோஷங்கள், துக்கங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும், அவர்கள் கூறிய அறிவுரைகள், ஆலோசனைகள் தங்களுக்கு வாழ்வின் படிப்பினையை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்களிடம் இருந்து விடைபெற்ற போது மீண்டும் வருவீர்களா என அவர்கள் கேட்டபோது, கனத்த இதயத்துடன் நிச்சயம் வருகிறோம் என கூறி பிரியா விடை பெற்று வந்தோம், எனக் கூறினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...