கோவை : அன்னூரை அடுத்த கணேஷபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கணேஷபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் விவசாய நிலத்தில் புதிதாக மதுக்கடை ஒன்று திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மதுபாட்டில்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது :- விவசாய விளைநிலங்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அரசு மதுமானகடை அமைக்க திட்டமிட்டு, விவசாய நிலத்தில் கட்டிடம் கட்டி வருகிறது. இதனால், அப்பகுதியிலுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலுடன், சாலைகள் நிறைந்துள்ள பகுதி என்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. விவசாய விளைநிலத்தில் மதுக்கடை அமைக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், எனக் கூறினர்.