மாணவர்கள் மத்தியில் மீண்டும் தலைத்தோங்கிய சாதி விவகாரம் : நடிகர் சமுத்திரகனி வேதனை

கோவை : சாதி என்ற விடயம் மீண்டும் மாணவர்கள் மத்தியில் வளர துவங்கி இருப்பதாக கோவையில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

கோவை : சாதி என்ற விடயம் மீண்டும் மாணவர்கள் மத்தியில் வளர துவங்கி இருப்பதாக கோவையில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.



குனியமுத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் இன்று கல்லூரியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது :- புதிதாக அப்பா 2 படத்திற்காக இடத்தை பார்க்க வந்திருக்கிருக்கிறேன். முதலாம் ஆண்டு மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருக்கிறேன். புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யாவின் கருத்து வரவேற்கத்தக்கது. கிராமப்புற மாணவர்களுக்கானதை நடிகர் சூர்யா பேசி இருக்கின்றார். புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கின்றது. இதை சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார். அனைவரும் இதைப்பற்றி பேசி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளோம், என்றார்.

மேலும், திரைப்படங்களில் பெரியாரிசம், அம்பேத்காரிசம், பொதுவுடமை கருத்துகளை திரைப்பட இயக்குநர்கள் பதிவு செய்ய என்ன தேவை இப்போது ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு சமுத்திரக்கனி அளித்ததாவது :- சாதி என்ற விடயம் மீண்டும் மாணவர்கள் மத்தியில் வளர துவங்கி இருக்கின்றது. கல்லூரி மாணவர்கள் கைகளில் சாதிக்கென்று தனியாக கலர், கலராக கயிறு கட்டி திரிகின்றனர். சாதி என்பது இப்போது பள்ளிகளிலும் வந்து விட்டது. திரும்பவும் மூளை சலவை செய்து சாதியை தள்ளி வைத்து விட்டு பயணப்பட்டால், மட்டுமே மனிதராக முடியும் என்பதை உணர்த்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. சாதி வேறுபாடு மீண்டும் திரும்ப ஆரம்பித்து விட்டது. இதை களைய வேண்டும். இந்திமொழி தேவை எனில் படித்து கொள்ள வேண்டியதுதான். சாட்டையை தொடர்ந்து ஒரு படத்தில் பேராசிரியராக நடிக்கின்றேன், எனக் கூறினார்.

மேலும், சென்னையில் ரவுடிசம் செய்யும் கல்லூரி மாணவர்களின் கையை காவல் துறை உடைக்கும் நிலை இருப்பது குறித்த கேள்விக்கு, தண்டணைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே தவறுகளை தடுக்க முடியும். பேசி கிட்டே இருந்தால் எதுவும் நடக்காது. அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும். செத்துவிடுவேன் என்ற பயம் இருந்தால்தான் பாலியல் தவறு செய்ய மாட்டார்கள். அதுபோல சில விவகாரங்களில் பயம் கொடுப்பதில் தவறில்லை, என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...