கோவை : கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையான கோவையில் கொட்டுவதற்காக வந்த லாரிகளை ரோந்துப் பணியில் இருந்த போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாகவே தமிழக எல்லைகளில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இப்படி கொண்டு வரப்படும் கழிவுகளை இரவு நேரங்களில் தமிழக எல்லையோரங்களில் உள்ள வனப்பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் சமூக விரோதிகள் கொட்டி செல்கின்றனர். இந்த சம்பவங்கள் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவையை ஒட்டியுள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை கொட்டப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் கூட பிள்ளையார் புரம் அருகே கேரளா கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து, போத்தனூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இப்படி மர்மமான முறையில் கழிவுகளை கொட்டி செல்லும் லாரிகளை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். இந்த சூழலில், நேற்று இரவு கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி கழிவுகளை ஏற்றிக்கொண்டு பிள்ளையார் புரம் அருகே வந்த இரண்டு லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியில் கழிவுகள் இருந்ததை உறுதி செய்ய போலீசார் லாரிகளை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, கர்நாட மாநிலம் மைசூரைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் சிவக்குமார் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் வடிவேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், கழிவுகள் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது..? எங்கு கொட்டபட இருந்தது..? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணைக்குப் பின் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.