திருப்பூர் : திருப்பூர் அருகே கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், கொலையா..?, தற்கொலையா..? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் கோம்பைத்தோட்டம் பழக்குடோன் பகுதியைச் சேர்ந்தவர் ரப்தீன் (52). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் கட்டிங்க் மாஸ்டராக பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் . இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த கிணற்றில் ரப்தீன் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தும், தீயணைப்புத் துறையினர் வர காலதாமதம் ஆனதால், அங்குள்ள இளைஞர்களின் உதவியோடு, சடலத்தை போலீசார் மீட்டனர்.
பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ரப்தீன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா...? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.