தேனியில் இருந்து சுமார் 3 மணிநேரத்தில் கோவை வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு : உயிரைக் காக்க ஒருங்கிணைந்த ஓட்டுநர்களுக்கு குவியும் பாராட்டு

கோவை : குழந்தையின் உயிரைக் காக்க தேனியில் இருந்து கோவைக்கு 2 மணி நேரம் 55 நிமிடத்தில் வந்தடைய உயிரை பணையம் வைத்து ஆம்புலன்சை இயக்குநர்களுக்கு ஓட்டுநர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை : குழந்தையின் உயிரைக் காக்க தேனியில் இருந்து கோவைக்கு 2 மணி நேரம் 55 நிமிடத்தில் வந்தடைய உயிரை பணையம் வைத்து ஆம்புலன்சை இயக்குநர்களுக்கு ஓட்டுநர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஓட்டுநர்கள் என்றாலே ஒரு வகையான அலட்சிய பார்வை அனைவர் மனதிலும் நிலவி வருகிறது. மேலும், சமூகத்தின் முன் அவர்களின் மீது ஒரு தவறான கண்ணோட்டமும் உருவாகியுள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறுகள் இப்படி ஒட்டுமொத்த ஓட்டுநர்களையும் தவறாக சித்தரிக்கிறது. ஆனால், இந்த தவறான சித்தரிப்பை சிதைக்கும் வகையில், தேனி முதல் கோவை வரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பேருதவி ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது



கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தசாமி மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு பிறந்த குழந்தை மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்து சிகிச்சை அளித்தனர்.

ஆனால், அங்கு போதுமான சிகிச்சை வசதிகள் இல்லாததால், மேல்சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்தனர். ஆனால், கோவைக்கு குழந்தையை அழைத்துச் செல்ல 5 மணி நேரத்திற்கு மேல் ஆகும். அது ஒருவேளை ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தையை அழைத்துச் செல்வது என்றால் இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்சில் கொண்டு செல்லுமாறும், முடிந்த வரை விரைவாக மருத்துவமனையை அடைய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இதையடுத்து, கடந்த 30ஆம் தேதி இரவு ஆபத்தான சூழலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குழந்தையை மீட்க உதவி தேவை என வாட்ஸ்அப் மூலம் வந்த தகவலையடுத்து, துரை டிரஸ்ட் ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் சதீஷ் குமார் என்பவர் இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற தானாக முன் வந்தார். இவர் கடந்த 31 ஆம் தேதி இன்குபேட்டர் வசதிகள் கொண்ட ஆம்புலன்சை கேரள மாநிலத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நண்பர்கள் மூலம் குறைந்த விலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்படி, ஆம்புலன்ஸ் அன்று பிற்பகல் 3.15 மணியளவில் தேனி அரசு மருத்துவமனையில் இருந்து கோவைக்கு கிளம்பியது.

அதேபோல, மருத்துவரின் ஆலோசனையின்படி செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் whatsapp குழுவின் மூலம் நடைபெற்றது. இந்த தகவல்கள் தேனி மாவட்ட ஓட்டுநர்கள், திண்டுக்கல் மாவட்ட ஓட்டுநர்கள், திருப்பூர் மாவட்ட ஓட்டுநர்கள், கோவை மாவட்ட ஓட்டுநர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வைத்தது.

இதன்படி, குழந்தையை அழைத்துச் செல்லும் ஆம்புலன்சுக்கு முன்புறம் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் குழந்தையின் உயிர் ஆபத்தான சூழலில் உள்ளது. உடனடியாக மருத்துவமனையை அடைய வேண்டும். ஆகவே, வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்ல ஒலிபெருக்கி மூலம் "அலர்ட்" செய்யப்பட்டது. இப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலர் அவரவர் மாவட்டத்தில் தங்களால் முடிந்த உதவி எல்லாம் வழியெங்கிலும் செய்தனர். முதலில் செம்பட்டி முதல் ஒட்டன்சத்திரம் வரை குழந்தையை அழைத்துச் செல்லும் ஆம்புலன்சுக்கு முன்பு அலர்ட் செய்துகொண்டே தனியார் வாகனம் முன் சென்றது.



இதையடுத்து, ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வேறொரு ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலான பகுதியில் சுமார் பத்து கிலோமீட்டர் பயணம் செய்தது. தொடர்ந்து, தாராபுரம் முதல் பல்லடம் வரை "பேட்ரோல் போலீஸ்" மற்றும் ஆம்புலன்ஸ் உதவியுடன் பயணம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர், பல்லடம் பகுதியில் இருந்து காரணம்பேட்டை வரை மீண்டும் வேறு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, காரணம் பேட்டை முதல் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மாசானிக் ஹாஸ்பிடல் வரை ஹைவே பேட்ரோல் போலீஸ் உதவியுடன் வெற்றிகரமாக சுமார் 6.10 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.

இந்த குழந்தையை இப்படி வெற்றிகரமாக கொண்டுவர தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை போன்ற மாவட்டங்களை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் சாலைகளில் ஒரத்தில் நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் 240 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி 55 நிமிடத்தில் கடந்து உயிருக்கு போராடிய குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாபர் அலி கொண்டுவந்து சேர்த்தார். குழந்தையை உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது, அந்த குழந்தை குணமடைந்துள்ளது.

இந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த சதீஷ்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். குழந்தையை பத்திரமாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சதீஷ் குமார் சிம்பிளிசிட்டி செய்தி குழுவினரிடம் கூறும்போது :- இந்த குழந்தையை தேனியில் இருந்து கோவை வரை கொண்டுவர அனைவரின் கூட்டு முயற்சியே காரணம். ஓட்டுநர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என அனைவரின் ஒத்துழைப்பினால் 2 மணிநேரம் 55 நிமிடத்தில் குழந்தையை பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது. இதனால், குழந்தைக்கு உடனடி சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளது. இந்த நிகழ்வு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வாட்ஸ்அப் தகவல்கள் மூலம் ஓட்டுநர்கள் தானாக முன்வந்து உதவி செய்த சம்பவம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...