நீலகிரி : கோத்தகிரியில் சுகுனி காய் விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில், உரிய விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், நூல்கோல், மேரக்காய், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். மேலும், ஒருசில விவசாயிகள் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி போன்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலிஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்கின்றனர். அவர்கள் விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை, வனவிலங்குகளின் அட்டகாசம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இங்கிலிஷ் காய்கறிகளுக்கு நல்ல கொள்முதல் விலை இருந்து வருவதால், பெரும்பாலான விவசாயிகள் அவற்றை பயிரிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசக்கல், ஓடேன்துறை, வ.உ.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சுகுனி காய் பயிரிட்டு உள்ளனர். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுகுனி காய் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலி நாட்டை தாயகமாக கொண்ட இவ்வகை காய், மருத்துவ குணம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளதால், இங்கிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கோத்தகிரி பகுதியில் சுகுனி காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. எனவே, சுகுனி காய்க்கு நல்ல விலை கிடைக்குமா..? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இது குறித்து சுகுனி காய் பயிரிட்டு உள்ள கூக்கல்தொரை பகுதியைச் சேர்ந்த விவசாயி பாபு கூறியதாவது:- உணவில் சுகுனி காயை பயன்படுத்தினால், அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம், உடல் எடை ஆகியவற்றை குறைக்கிறது. இளமையாக இருக்கவும், இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கவும், கண் பார்வையை அதிகரிக்கவும் சுகுனி காய் பயன்படுகிறது. சுகுனி காய் கண்ணை கவரும் மஞ்சள் நிறத்தில் சுமார் 4 அங்குலம் முதல் 8 அங்குல நீளத்திற்கு வளரக்கூடியது.
நிலத்தை நன்கு பண்படுத்தி சுகுனி காய் நாற்றுக்களை தோட்டங்களில் நடவு செய்ய வேண்டும். அதன்பிறகு, தண்ணீர் பாய்ச்சி, தேவையான உரங்களை இட்டு நன்கு பராமரித்து வந்தால், சுகுனி காய்கள் 35 நாட்கள் முதல் 55 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது, சுகுனி காயை கிலோவுக்கு 25 ரூபாய் விலை கொடுத்து, விளைநிலங்களுக்கே வந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், இவற்றை விற்பனை செய்வதற்காக காய்கறி மண்டிகளுக்கு கொண்டு செல்ல ஆகும் போக்குவரத்து செலவு குறைகிறது. குறுகிய காலத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராவதுடன், கணிசமான லாபமும் கிடைப்பதால், சுகுனி காய் பயிரிட ஆர்வம் காட்டி வருகிறோம். தற்போது, விளைச்சல் அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், சுகுனி காய்க்கு போதிய விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.