திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான அதிநவீன இயந்திரங்களின் 3 நாள் கண்காட்சி தொடக்கம்

திருப்பூர் : பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நவீன இயந்திரங்களின் 3 நாள் கண்காட்சி திருப்பூரில் இன்று தொடங்கியது.

திருப்பூர் : பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நவீன இயந்திரங்களின் 3 நாள் கண்காட்சி திருப்பூரில் இன்று தொடங்கியது.



திருப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான இயந்திரங்களின் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில், இந்தாண்டும் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பிரிண்டிங்க், டெய்லரிங்க், வாசிங்க் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்ற கண்காட்சி நடைபெற்றது. 



இதில், பிரிண்டிங்க் துறையில் அதிவேகத்தில் பிரிண்டிங்க் செய்திட நவீன இயந்திரங்கள் புதுவரவாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியினை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணை தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார் . 



அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இந்த கண்காட்சியின் மூலம் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் இயந்திரங்களை பற்றி தெரிந்துகொள்ள வசதியாக இருக்கிறது. திருப்பூரிலிருந்து உற்பத்தியாளர்கள் அயல்நாடுகளோடு வர்த்த போட்டி போடவேண்டி இருப்பதாலும், நவீன முறையில் பேசன் கார்மெண்ட்ஸ் செய்ய இருப்பதாலும், இந்த கண்காட்சி பலவகையில் உதவிகரமாக இருக்கும். மேலும், பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நவீன இயந்திரங்கள் வாங்கும்போது மத்திய அரசு 15 முதல் 20 சதவிகிதம் வரையிலான மானியம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இயந்திரங்களுக்கான மானியத் தொகையினை பெற இதுவரை 7,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என பேட்டியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஏற்றுமதியாளர்கள், பின்னலாடை உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டன. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...