காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவம்த்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் ஆதி அத்திவரதர் வைபவம் ஜூலை 01-ம் தே முதல் ஆக., 17-ம் தேதி வரை 48 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆக.,01 முதல் 17-ம் தேதி வரை நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க வெளிநாடுகள், வெளிமாநிலம் என பல பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 1.5 லட்சம் பக்தர்களும், விடுமுறை தினங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் வருகை புரிகின்றனர். இதுநாள் வரை அருள்மிகு அத்திவரதரை சுமார் 44 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனார். இவ்வைபவத்திற்கு வருகை புரியும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான வாகன நிறுத்த வசதி, தற்காலிக பேருந்து நிலையங்கள், சுகாதாரம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குப்பைகள் மற்றும் இதர கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 23-ம் தேதி திருக்கோயிலுக்கு நேரிடையாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின்னர், அத்திவரதரின் வைபவத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு, அன்னதானம் வழங்குவதற்காக தனது சொந்த பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி, அன்னதானத்திற்கு நிதி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவரதர் வைபவம் நிகழ்ச்சிக்கு வருகை புரியும் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அருள்மிகு அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் பெருநகராட்சியில் துப்புரவு மற்றும் குடிநீர் வழங்கும் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.