கோவை : பந்தய சாலை பகுதியில் உள்ள மில் அதிபரின் வீட்டில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து சுமார் 2 கோடியே 7 லட்சம் மதிப்புள்ள வைரம், தங்கம் மற்றும் பணத்தை பத்திரமாக மீட்டனர்.

கோவை பந்தய சாலை பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ் எத்திராஜ். இவர் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் பெங்களூர் செல்வதால், வீட்டின் நம்பிக்கைக்குரிய பணியாளரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் ராய் என்பவரிடம் வீட்டை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்து சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி பெங்களூரூ சென்றுவிட்டு திரும்பிய போது, அவரது வீட்டில் ரூ. 2.7 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது. இதையடுத்து, மறுநாள் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வீட்டில் பணியாளராக வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் ராய் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும், சோதனைக்கு அழைத்து வரப்பட்ட மோப்பநாய் வில்மா, கோவை மத்திய ரயில்நிலையத்தை நோக்கி ஓடிச் சென்றது. இதனால், ரயில்நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில், இரவு 9.30 மணிக்கு எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயிலில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக மேற்குவங்க மாநிலம், பான்குரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோட்டிஸ்வரா மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், பான்குரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமைத்த தனிப்படை போலீசார், பான்குரா ரயில் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விகாஷ் குமாரை கைது செய்தனர், மேலும், விகாஸிடம் இருந்த தங்க வைர நகைகள் மற்றும் பணம் முழுமையாக மீட்கப்பட்டது. பின்பு அங்கிருந்து விகாஸ் குமார் ராயை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கொள்ளையனை துரிதமாக செயல்பட்டு கைது செய்த கோவை மாநகர காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.