கோவை : திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவு நோயாளியை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மதுபோதையில் அழைத்து வர இருந்த நிலையில், கோவை மாநகர காவல் துணை ஆணையாளரின் தலையீட்டால் விபரீதமான முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் 2008-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் அவசர கால மருத்துவ நுட்புணர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், கால் சென்டர் தொழிலாளர்கள் என மொத்தம் 4,500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். மேலும், இந்த ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் இரவு, பகல் என பாராமல் வேலை செய்து வருகின்றனர். அதேபோல, 108 ஆம்புலன்ஸானது விபத்தில் சிக்கியவர்களை மட்டுமல்லாமல், திடீரென்று பிரசவம், மாரடைப்பு, ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என உயிர்காக்கும் உன்னத பணிகளையும் செய்து வருகிறது.
இப்பெரும் சேவையை உணர்ந்து பணிபுரிந்து வரும் பல தொழிலாளர்கள் இருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில், ஒரு சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.
திருப்பூர் to கோவை 108-ன் பயணம் :
திருப்பூர் மாவட்டத்தில் 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ், ஒரு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் என மொத்தம் 24 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. மேலும், இந்த சேவையில் 110-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக தினமும் 8 முதல் 10 நோயாளிகள் வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இப்படி அழைத்துச் செல்வதற்கு என்று இரண்டு ஆம்புலன்சுகள் பிரத்யேகமாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 ஆம்புலன்ஸும் 24 மணி நேரத்தில் நான்கு முறை கோவையை நோக்கி வருகிறது.
ஆனால், இரவில் வரும் பொழுது 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒரு சிலர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தள்ளாடவிருந்த ஆம்புலன்சை தடுத்து நிறுத்திய காவல்துறை :
மது போதையில் வாகனம் இயக்குவதாலேயே விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. இதனால், சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறையினர் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். இது சாதாரணமாகவே அனைத்து வண்டிகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் மது போதையில் திருப்பூர் முதல் கோவை வரை வாகனத்தை இயக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று இரவு திருப்பூர் மாவட்ட பழைய அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை TN 20 G 1382 என்ற எண் கொண்ட 108 ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் கணேஷ் மது போதையில் இயக்கவிருந்தார். இந்த நிலையில், நோயாளியுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ள இருந்த இந்த சம்பவம் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணனுக்கு தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த அவர் உடனடியாக திருப்பூர் மாவட்ட காவல்துறையினரை உஷார்படுத்தினார்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்து, மதுபோதையில் வாகனம் இயக்க இருந்த ஓட்டுநரை முதல் கட்டமாக தடுத்து நிறுத்தினர். பின்னர், திருப்பூர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டார். இதில், அவர் மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், நிர்வாகத் தரப்பில் பணி மட்டும் தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, மருத்துவமனையிலேயே காத்திருந்த நோயாளி சில மணி நேரங்களுக்குப் பிறகு சுமார் ஒரு மணியளவில் வேறு ஒரு ஓட்டுநர் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸின் திருப்பூர் மாவட்ட அவசரகால மேலாண்மை நிர்வாகி லிபின் ஜோஸ் கூறுகையில், "எங்கள் ஓட்டுநர் மதுபோதையில் வாகனம் இயக்குவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாங்கள் அப்பகுதிக்கு வந்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அவரிடம் நாங்கள் விசாரித்ததில், அவர் காலையில் தான் குடித்ததாக கூறுகிறார். இது தொடர்பான விசாரணை சென்னையில் வைத்து நடைபெறும். நான் எனது தகவல்களை தலைமைக்கு அனுப்பி விடுவேன்," என்றார்.
உயிரை காக்க வேண்டிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மதுபோதையில் வாகனத்தை இயக்கி இருந்தால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்தது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.