நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் - உதகை சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அக்ரம் முகமது என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று இரவு மலப்புரம் மாவட்டம் கருவாடன்குன்னு பகுதியைச் சேர்ந்த அகமது கோயா என்பவரது மகன் அக்ரம் முகமது செய்யது (33), இவர் தனது புதிய காரில் அதே பகுதியைச் சேர்ந்த தீபு (30), செமீர் (33) ஆகியோருடன் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் கூடலூர் பஜாரை கடந்து நடுகூடலூர் பகுதியில் சென்ற போது, வளைவான பகுதியில் சுமார் 20 அடி பள்ளத்தில் இருந்து குடியிருப்பின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அக்ரம் முகமது சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், இந்த விபத்தினால் ஏற்பட்ட சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்த போது, வீட்டின் முன் கார் கவிழ்ந்து கிடப்பதை பார்த்துள்ளனர். அப்போது, பலத்த காயமடைந்த மற்ற இருவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.