உதகையில் கிறிஸ்துவ ஆலயத்தில் மாதா சிலை உடைப்பு : போலீசார் விசாரணை

நீலகிரி : உதகை எல்க்ஹில் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : உதகை எல்க்ஹில் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில்  வேளாங்கண்ணி மாதா சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிரசித்தி பெற்ற தூய மரிய தத்தேயு ஆலயத்தில் இருந்த வேளாங்கண்ணி மாதா சிலையை மர்ம நபர்கள் உடைத்து  விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி. பதிவு காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எல்க்ஹில் பகுதியில்  உள்ள இந்த ஆலயத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்தி வரும் நிலையில், மாதா சொருபம்  உடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக இப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



இதனைத்தொடர்ந்து, சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிலையை உடைத்த ஆலயத்தில் மக்கள் கூடி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...