சொந்த மண்ணில் நிகழும் மனித - யானைகள் மோதலை தடுக்க கும்கியாக அவதாரம் எடுத்த ‘சுயம்பு’ கோவை வருகை

கோவை : தடகாம் வனப் பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சுயம்பு என்ற யானை, கும்கியாக மீண்டும் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை : தடகாம் வனப் பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சுயம்பு என்ற யானை, கும்கியாக மீண்டும் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை தடாகம் வனப்பகுதியில் 8 வயது இருக்கும் போது வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது சுயம்பு என்கிற யானை. பின்னர், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, கும்கியாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த ஊரான கோவையில் நிகழும் மனித - யானை மோதலை தடுப்பதற்காக சுயம்பு கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளான். சாடிவயல் யானைகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சுயம்புவுடன் பணியாற்ற, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெங்கடேசன் என்கிற மற்றொரு கும்கி விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு சுயம்பு மற்றும் வெங்கடேசன் ஆகிய கும்கிகள், நிகழும் மனித - யானை மோதலை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.



கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடாகம் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து சின்னத்தம்பியை பிடித்தது கும்கியாக சுயம்புவுக்கு முதல் பணியாகும். அதிலும், உடுமலைப்ப்பேட்டையில் தனி ஒருவனாக இருந்து சின்னத்தம்பியை லாரியில் ஏற்றிய சுயம்புவின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...