கோவை : மேட்டுப்பாளையம் அருகே தனியார் நிறுவன மினி வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 13 பெண்கள் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சின்னமத்தம்பாளையத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் மினி வேன் ஒன்று நேற்று ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நின்று கொண்டிருந்தது. மினிவேனை காரமடை மத்தம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் வாசன் இயக்கி வந்தார். அப்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசுப் பேருந்து இவரின் மினிவேன் மீது பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில், நிலைதடுமாறிய மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த பெண் ஊழியர்கள் 13 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, விபத்தில் சிக்கிய 13 பேரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள், ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், சரஸ்வதி மற்றும் லலிதாமணி ஆகிய இரண்டு பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.