பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் மான் மற்றும் முயல்களை வேட்டையாட முயன்ற இருவர் கைது

கோவை : மேட்டுப்பாளையம் அருகே பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மான் மற்றும் முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேர் வனத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மான் மற்றும் முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேர் வனத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சத்தம் கேட்பதாக அந்தப் பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனவர் ராதாகிருஷ்ணன், வனக்காப்பாளர்கள் மோகன்ராஜ், தினேஷ் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆகியோர் இரவு நேரத்தில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியின் பாரதிநகர் அருகே துப்பாக்கி சத்தம் இருமுறை கேட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, துப்பாக்கி சத்தம் கேட்ட இடத்திற்கு வனத்துறையினர் விரைவாக சென்றனர். அப்போது, நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் இரண்டு பேர் வனத்துறையினரை கண்டவுடன் தப்ப முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை மீட்டனர். 



பின்னர், அவர்களிடம் விசாரணை செய்தபோது, கோவை கவுண்டம்பாளையம் ஆர்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ரஞ்சித்குமார், திம்மம்பாளையம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பாலுதுரை என்பவரின் மகன் ஜீந்தா என தெரியவந்தது. அவர்கள் வனப்பகுதியில் மான் மற்றும் முயல்களை வேட்டையாட வந்தததாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, அவர்களையும், அவர்களது துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களையும் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் ரஞ்சித்குமார் காரமடை வனப்பகுதியில் மான் வேட்டையாடியபோது கையும் களவுமாக பிடிப்பட்டார். சிறையில் இருந்து வந்தவுடன் மீண்டும் மானை வேட்டையாட முயன்ற போது பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரால் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...