கோவை : மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தொழிலாளர் விரோத மசோதவை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தொழிலாளர்களுக்கு சாதகமானவற்றை நீக்கியும், பெருமுதலாளிகளுக்கு ஆதரவானவற்றை இணைத்தும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்துள்ளதாகவும், 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி மசோதாவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகக் கூறி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் என ஊதியக்குழு பரிந்துரைத்த நிலையில், ஊதிய விதிகள் மசோதாவில் ரூ. 4,628 என மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 8 மணி நேரம் வேலை என்பதை அரசு நிர்ணயிப்பதே நேரம் என்றும், பணியில் சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு முதல் ஏழு ஆண்டுகளுக்கு போனஸ் வழங்க வேண்டியதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், மோட்டார் வாகன சட்டத்தில் தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் பறிப்பு, வாகனப் பதிவுக் கட்டணம், காப்பீடு உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் கடுமையாக உயர்த்தி மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்துள்ளதாகவும், தொழிலாளர் விரோத மசோதாக்களை அவசர அவசரமாக பா.ஜ.க அரசு தாக்கல் செய்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி. தலைவர் வி.ஆர். பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வரும் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.