நீலகிரியில் பழங்குடியின கிராமங்களை முற்றுகையிட்டுள்ள காட்டு யானைகள் : வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள்

நீலகிரி : குன்னூர் அருகே முப்பர்காடு, பழனியப்பா எஸ்டேட் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் காட்டுயானைகள் முற்றுகையிட்டு இருப்பதால், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : குன்னூர் அருகே முப்பர்காடு, பழனியப்பா எஸ்டேட் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் காட்டுயானைகள் முற்றுகையிட்டு இருப்பதால், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மூப்பர்காடு, பழனியப்பா எஸ்டேட் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கடந்த சில தினங்களாக பெய்த மழையால் உணவு, குடிநீரைத் தேடி வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை, பரளிக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள், மூப்பர்காடு கிராமத்தை நோக்கி படையெடுத்து வரத் துவங்கி உள்ளன. இந்த நிலையில், குட்டியுடன் கூடிய காட்டுயானைகள் மூப்பர்காடு பழங்குடியின கிராமத்தை பலாப்பழத்திற்காக முற்றுகையிட்டுள்ளன. இதனால், அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.



மேலும், வனத்தில் இருந்து வரும் குடிநீர் குழாய்களை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைப்பதிலும் அச்சத்துடனேயே செயல்பட வேண்டியுள்ளது. இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இங்கு வசித்து வரும் பள்ளி மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமலும், கிராம மக்கள் தோட்ட வேலைக்கு செல்லாமலும், வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி அடிக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...