கோவையில் பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு : விதிகளை மீறி பொருத்தப்பட்ட 91 உயர் அழுத்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவை : கோவை மாவட்டம் நகர பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் து.மு. பாஸ்கரன் தலைமையில் பேருந்துகளில் தணிக்கை நடத்தப்பட்டு, விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த 91 உயர் அழுத்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் நகர பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் து.மு. பாஸ்கரன் தலைமையில் பேருந்துகளில் தணிக்கை நடத்தப்பட்டு, விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த 91 உயர் அழுத்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காந்திபுரம் மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் து.மு. பாஸ்கரன் தலைமையில், பேருந்துகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் செல்வராஜ், அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் ராதாகிஷணன் ஆகியோர் கொண்ட குழுவால் கூட்டுத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்ததாவது :- இத்தணிக்கை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி உத்தரவின் பேரில்; காந்திபுரம் நகர் மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் பேருந்துகளில் உயர்அழுத்த காற்று ஒலிப்பான், மல்ட்டி டோன் ஹாரன் மற்றும் டிஸ்கோ லைட்ஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீதான சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையில்; 227 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டது. இதில், 91 பேருந்துகளில் உயர்அழுத்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அளவுக்கு அதிகமாக உயர்அழுத்த காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்த 29 பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. 3 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி லைட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இவ்வாறான கூட்டு தணிக்கை தொடர்ந்து நடைபெறும். பொதுமக்களுக்கு, இடையூறாக உள்ள மற்றும் விதிமுறைகள் மீறி ஒளி, ஒலி அமைப்புகள் பொருத்தி இயக்கப்படும் வாகனங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...