கோவை : உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுவன் ஹாலித் அன்சாரியை எரித்து படுகொலை செய்தவர்களைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கம் எழுப்பக்கோரி உத்திர பிரதேசத்தில் 15 வயது சிறுவன் ஹாலித் அன்சாரியை எரித்து படுகொலை செய்தவர்களைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, அக்கட்சியினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மாட்டின் பெயராலும், மதத்தின் பெயராலும் இஸ்லாமிய இளைஞர்கள் அடித்து கொல்லப்படுவதும் அதிகரித்து வருவதாகவும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கம் எழுப்பக் கோரி அச்சிறுவனை கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.