கோவையில் இருசக்கர வாகனத்தை இலாவகமாக கொள்ளையடிக்கும் திருடர்கள் : அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

கோவை : கோவையில் இருசக்கர வாகன கொள்ளையர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாதவாறு இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் வெளியாகியிருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


கோவை : கோவையில் இருசக்கர வாகன கொள்ளையர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாதவாறு இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் வெளியாகியிருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.



கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்துள்ளது. இந்த வாகனத் திருட்டு குறித்து காவல் நிலையங்களில் பல புகார்கள் நிலுவையிலேயே உள்ளன. காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதை தடுப்பதற்கு பல்வேறு வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாலும், பிற மாவட்டங்களிலிருந்து இருசக்கர வாகனத்தை திருடும் திருடர்கள் மிகவும் இலாவகமாக இருசக்கர வாகனங்களை திருடி செல்கின்றனர்.



இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள இரண்டாம் நம்பர் வீதியில் கடந்த 25-ம் தேதி நள்ளிரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டி.வி.எஸ். எக்ஸ்.எல். வாகனத்தை சுமார் ஏழு நிமிடங்களில் தன்னுடைய சொந்த வண்டியை எடுத்து செல்வது போல் திருடர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் தொடர்புடையது இந்தக் காட்சிகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் குற்றப்பிரிவு போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...