திருப்பூர் : வளிமண்டலத்தில் ஏற்பட்ட வாயுத்துகள்கள் மற்றும் நீர்க்குமிழிகளின் காரணமாக, வானில் சூரியனை சுற்றி நீள வட்டம் போன்று தென்பட்ட காட்சிகளை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
திருப்பூர் : வளிமண்டலத்தில் ஏற்பட்ட வாயுத்துகள்கள் மற்றும் நீர்க்குமிழிகளின் காரணமாக, வானில் சூரியனை சுற்றி நீள வட்டம் போன்று தென்பட்ட காட்சிகளை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

இன்று காலை 11 மணி முதல் சுமார் 2 மணி நேரம் வரை வானில் சூரியனை சுற்றிலும் நீள வட்டம் தோன்றியது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தும், தங்கள் செல்போனில் படம் எடுத்தும் பகிர்ந்து வந்தனர். இது குறித்து அறிவியல் இயக்கத்தினர் கூறும்போது, "பூமியில் ஏற்படும் தூசு துகள்கள் போல வளிமண்டலத்தில் உள்ள தூசு துகள்கள் குப்பை மற்றும் நீர்க்குமிழிகள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மிதந்து சூரியனை சுற்றி வட்டவடிவில் சேர்ந்துள்ளது. அவை தானாகவே சிறிது நேரத்தில் பிரிந்துவிடும் என்பதால், இவையால் எந்தவித இயற்கை மாற்றமோ, சேதமோ நிகழப்போவதில்லை," என தெரிவித்தனர்.