திருப்பூர் : பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.

திருப்பூர் அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (60). இவர் பழைய சாக்குப் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கேன்கள் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை பரமசிவனுக்கு சொந்தமான குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக பல்லடம் காவல்நிலையம் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறை வாகனமும் வரவழைக்கப்பட்டு, வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.